லியோ சிவக்குமாரின் “டெலிவரி பாய்” படத்தின் டீசர் நாளை வெளியீடு

லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
லியோ சிவக்குமாரின் “டெலிவரி பாய்” படத்தின் டீசர் நாளை வெளியீடு
Published on

நானி இயக்கத்தில் லியோ சிவக்குமார் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார்.

ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், ‘டெலிவரி பாய்’ படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com