மாரி செல்வராஜின் கலை மென்மேலும் சிறக்கட்டும் - 'வாழை' படத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!

'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குனர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com