தமிழ் தீ பரவட்டும்...'பராசக்தி' படத்தின் புதிய போஸ்டர் வைரல்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் தீ பரவட்டும்...'பராசக்தி' படத்தின் புதிய போஸ்டர் வைரல்!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 25' என பெயரிடப்பட்டிருந்ததது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நேற்று இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில், ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்திற்கு "பராசக்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் "தமிழ் தீ பரவட்டும்" என்ற வாசம் இடம் பெற்றுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் தோற்றமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com