போதைகளை புறம் தள்ளுவோம்... மனித நேயம் காப்போம் – நடிகர் ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரஷ் அவ்வப்போது சமூக அக்கறை சார்ந்த கருத்துகளை பகிர்ந்து வருவார்.

போதைகளை புறம் தள்ளுவோம்... மனித நேயம் காப்போம் – நடிகர் ராஜ்கிரண்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரண், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். கிராமியக் கதைக்களம் கொண்ட படங்களில் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சமூக அக்கறை சார்ந்த கருத்துகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் அவர், பல்வேறு சமூக விழிப்புணர்வு பிரச்சினைகளிலும் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்த முறை போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "பாட்டிலில் அடைக்கப்பட்ட சாராயம், கள்ளு மற்றும் அனைத்து வகையான போதைப்பொருட்களும் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிக மிக தீங்கானவை. எந்த வகையான போதைப்பொருளாக இருந்தாலும், அதில் ஒரு துளி கூட உடலுக்குள் சென்றால் அது ஆரோக்கியத்தை பாதிக்கத் தொடங்கிவிடும் என்று சர்வதேச ஆரோக்கிய அமைப்பின் அறிக்கை கூறுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

போதை மனிதநேயத்தை அழிக்கிறது

தொடர்ந்து, போதைப்பழக்கம் மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், மனநலத்தையும் கடுமையாக பாதிப்பதாக ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலம் இருந்தால்தான் நல்ல மனநிலையும் உருவாகும் என்றும், நல்ல மனம் இருந்தால்தான் மனிதநேயம் நிலைத்து நிற்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விழிப்புணர்வுடன் வாழ வேண்டும்

இறுதியாக, "நல்ல உடம்பில் தான் நல்ல மனம் இருக்கும். நல்ல மனம் இருந்தால் தான் மனிதத்தன்மை இருக்கும். எனவே, போதைகளை புறம் தள்ளுவோம்... மனித நேயம் காப்போம்" என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ராஜ்கிரன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

ராஜ்கிரனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com