"கலையால் ஒன்றுபடுவோம், காலத்தை வென்றுவிடுவோம்" - தனது பாடல் வரிகளை புகழ்ந்த மலையாள நடிகைக்கு வைரமுத்து பதில்

கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடித்தவை என்று மலையாள நடிகை சம்யுக்தா கூறியுள்ளார்.
"கலையால் ஒன்றுபடுவோம், காலத்தை வென்றுவிடுவோம்" - தனது பாடல் வரிகளை புகழ்ந்த மலையாள நடிகைக்கு வைரமுத்து பதில்
Published on

சென்னை,

மலையாள நடிகை சம்யுக்தா தனக்கு கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் மிகவும் பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வைரமுத்து எழுதிய 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்' என்ற பாடல், 'காற்றே என் வாசல் வந்தாய்', 'கொஞ்சும் மைனாக்களே' உள்ளிட்ட பாடல் வரிகளை அவர் குறிப்பிட்டு பேசினார்.

இந்த காணொலியை கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே, தமிழும் மலையாளமும் உறவு மொழிகள்; நாம் கலையால் ஒன்றுபடுவோம், காலத்தை வென்றுவிடுவோம்" என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து (@Vairamuthu) October 13, 2022 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com