வாழ்க்கை என்பது மிகப்பெரிய புதிர்கள் கொண்ட பயணம் - கீர்த்தி சனோன்

பிரச்சினைகளை கடந்து, தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என்று கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன், தற்போது ஷாகித் கபூர் ஜோடியாக 'காக்டெயில்-2' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹோமி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சனோன், அங்கு பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

“என்னை பொறுத்தவரை எல்லா பிரச்சினைகளுக்கும் நான் சொல்லும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது, 'இட்ஸ் ஓகே. அடுத்து என்ன? என்பது தான். பிரச்சினைகளை உடனடியாக கடந்து, தீர்வை நோக்கி செல்ல வேண்டும். இப்படி ஆகிவிட்டதே... என்று நினைத்துக்கொண்டு இருந்தால், நாம் அந்த சிக்கலில் இருந்து மீண்டு வெளியே வரவே முடியாது.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய புதிர்கள் கொண்ட பயணம். அதை எதிர்கொண்டு புதிரை விடுவித்து போய்க்கொண்டே இருந்தால் தப்பிக்கலாம்” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com