தடைகளை தாண்டி முன்னேறும்போதுதான் வாழ்க்கை அழகாக இருக்கும் - ஹிப் ஹாப் ஆதி

நான் எதையும் கஷ்டம் என்று பார்ப்பது கிடையாது என்று ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

'ஹிப் ஹாப்' தமிழன் என்ற ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி, சினிமாவில் நுழைந்த 'ஹிப் ஹாப்' ஆதி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் 'மீசைய முறுக்கு 2' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் ஹிப் ஹாப் ஆதியிடம் 'உங்கள் வாழ்க்கையில் கண்ட தோல்விகளில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் எதையும் கஷ்டம் என்று பார்ப்பது கிடையாது. வாழ்க்கையிலும் பல தடைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும்போதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக, அழகாக இருக்கும்.

தடையை முட்டுக்கட்டையாக பார்க்காமல், அனுபவம் என்று கடந்து செல்ல பழகவேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாமே அனுபவம்தான். நினைத்த இலக்கை அடைய, இஷ்டப்பட்டு கஷ்டங்களை தாங்கிக் கொள்வது நல்லது" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com