'தவறான முடிவால் வாழ்க்கை நாசமானது' - நடிகை கிரண் வருத்தம்

நடிகை கிரண் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
'தவறான முடிவால் வாழ்க்கை நாசமானது' - நடிகை கிரண் வருத்தம்
Published on

தமிழில் கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ள கிரண், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இப்போது விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிரண் அளித்துள்ள பேட்டியில், "நான் ஒருவரை பைத்தியமாக காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனம் உடைந்து போனேன்.

சினிமாவில் சில காலம் நான் இல்லாமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வியே காரணம். அப்போது சரியாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன். ஆனால் தவறான முடிவு எடுத்ததால் வாழ்க்கை நாசமானது.

இப்போது நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் அழைக்கவில்லை. நான் தொடர்ந்து 5 வெற்றிப்படங்களில் நடித்து இருந்தும் ஒருவர் கூட படங்களில் நடிக்க அழைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com