படமாகும் வாழ்க்கை கதை - நரேந்திர மோடி வேடத்தில், விவேக் ஓபராய்

படமாகும் வாழ்க்கை கதையில், நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார்.
படமாகும் வாழ்க்கை கதை - நரேந்திர மோடி வேடத்தில், விவேக் ஓபராய்
Published on

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமா படமாக தயாராகும் சீசன் இது. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் படங்களாகி ஏற்கனவே வந்தன.

முன்னாள் முதல்-மந்திரிகள் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.

இந்த வரிசையில் தற்போதையை பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் மோடி வேடத்துக்கு நடிகர் தேர்வு நடந்தது. முன்னணி நடிகர்கள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராயை மோடி வேடத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். இதனை படத்தின் இயக்குனர் ஓமுங்குமார், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.

விவேக் ஓபராயின் முதல் தோற்றத்தை ஓரிரு நாளில் வெளியிடுகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com