''டிகாப்ரியோவுக்கு ''டைட்டானிக்''போல எனக்கு அந்த படம்'' - விஜய் தேவரகொண்டா


Like DiCaprio with Titanic...: Vijay Deverakonda on Arjun Reddy role
x
தினத்தந்தி 9 July 2025 12:44 PM IST (Updated: 9 July 2025 1:28 PM IST)
t-max-icont-min-icon

''அர்ஜுன் ரெட்டி'' படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்தார்.

சென்னை,

நடிகர் விஜய் தேவரகொண்டா ''நுவ்விலா'' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், சந்தீப் ரெட்டி வாங்காவின் ''அர்ஜுன் ரெட்டி'' படம்தான் அவருக்கு புகழ் பெற்று கொடுத்தது.

இந்த படம் அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இன்னும் அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசுகையில், ''டைட்டானிக் படம் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் எப்படிப் பிணைந்திருக்கிறதோ, அதேபோல் அர்ஜுன் ரெட்டி தன்னுடன் எப்போதும் இணைந்திருக்கும்'' என்றார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா, கோபக்கார, மது அருந்தும் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்திருந்தார். ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்தார். ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்தனர்.

விஜய் தேவரகொண்டா, தற்போது கவுதம் தின்னனுரியின் ''கிங்டம்'' படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமான இதில் சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் கஷிக் மஹதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


1 More update

Next Story