லிவ்-இன் ரிலேஷன்ஷிப்தான் பெஸ்ட் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் குறித்தும் அதில் தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்தும் பேசியிருக்கிறார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்தான் பெஸ்ட் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
Published on

மலையாள நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு முன்பாக அவர் நடித்த ஜகமே தந்திரன், புத்தம் புது காலை உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தொடர்ந்து, கேப்டன், கட்டா குஸ்தி, அம்மு குமாரி உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன.

கடைசியாக 2025ல் ‘தக் லைப்’ படத்தில் இவர் நடித்திருந்தார். இவர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்த ‘மாமன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி, தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். இவரது கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஐஸ்வர்யாவுக்கு, அவரது பார்வையில் இருந்து உறவு என்பது இரு மனிதர்களுக்கு இடையேயான புரிதல் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார். சட்ட ரீதியாக செய்து கொண்டதா மட்டுமே திருமணம் வலுப்பெறும் ஒன்று கிடையாது என்று கூறும் அவர், சிலரால் திருமணம் செய்து கொள்ளாமலேயே கூட மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கூறுகிறார். தனது 34 ஆண்டுகால வாழ்க்கையில் பல திருமணங்களையும், சில மனிதர்களையும் தான் பார்த்திருப்பதாகவும் அவர்களுள் உண்மையில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் குறைவுதான் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், அவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்றும் கூறுகிறார்.

திருமணம் என்பது ஒரு தவறு என்றோ, தேவையற்றது என்றோ ஐஸ்வர்யா லட்சுமி கூறவில்லை. அதற்கு மாறாக, அது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தேர்வு எனவும் அவர் கூறுகிறார். ஒரு சிலருக்கு திருமணம் என்பது பாதுக்காப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒன்று என்றும், பிறருக்கு சுதந்திரமாக வாழும் உறவுகள் ஏற்றதாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். இதில் முக்கியமாக, எந்த உறவாக இருந்தாலும் அவர்களுக்குள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு என்பது இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே இல்லை. வாழ்க்கைத்துணை என்று ஒருவர் வேண்டும் என்பது உண்மைதான். ஆனா, திருமண வாழ்க்கையில் இருவருக்குமே நிம்மதி இல்லாத நிலை வந்து விடக்கூடாது. அதனால், திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருப்பதே சிறந்தது. எனது இந்த நிலைபாடு காதலுக்கு எதிரானது அல்ல, சமூக அமைப்பாக இருக்கும் திருமண முறையைதான் நான் ஏற்கவில்லை” என்று ஐஸ்வர்யா பேசியிருக்கிறார். இது, இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com