மோகன்லாலின் “துடரும்” படத்தின் சாதனையை முறியடித்த “லோகா”

நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள‘லோகா’ திரைப்படம் உலகளவில் ரூ. 249 கோடி வசூல் செய்துள்ளது.
மோகன்லாலின் “துடரும்” படத்தின் சாதனையை முறியடித்த “லோகா”
Published on

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா . இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

லோகா திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியிலும் வெளியிட்டுள்ளனர். லோகா திரைப்படம் உலகளவில் ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது . வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள இப்படம் இதுவரை 17 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. லோகா திரைப்படம் உலகளவில் ரூ. 249 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், புக் மை ஷோ வழியாகக் கிடைத்த அதிகபட்ச டிக்கெட் விற்பனையை லோகா படம் பெற்றுள்ளது. 18 நாட்களில் 4.52 மில்லியன் டிக்கெட்டுகள் இந்தப் படத்திற்காக புக் மை ஷோ செயலி வழியாக விற்பனையாகியுள்ளன. 4.51 மில்லியன் டிக்கெட்டுகளை புக் மை ஷோ வழியாக விற்ற மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் 'துடரும்' படத்தின் சாதனையை முறியடித்து லோகா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com