இந்த மைல்கல்லை எட்டிய 4-வது மலையாள படம்...''லோகா'' படைத்த சாதனை


Lokah: Only the fourth Malayalam film to achieve this record milestone
x
தினத்தந்தி 10 Sept 2025 2:21 AM IST (Updated: 11 Sept 2025 10:23 AM IST)
t-max-icont-min-icon

கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னை,

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ''லோகா'', பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் ரூ. 200 கோடி மைல்கல்லை எட்டி ''லோகா'' சாதனை படைத்திருக்கிறது. இந்த மைல்கல்லை எட்டிய 4-வது மலையாளப் படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

லோகாவுக்கு முன், மஞ்சும்மல் பாய்ஸ் (ரூ. 242 கோடி), எல்2எம்புரான் (ரூ. 268 கோடி), மற்றும் தொடரும் (ரூ. 235 கோடி) ஆகியவை இந்த சாதனை பட்டியலில் உள்ளன. இந்த வேகத்தில் சென்றால் தொடரும் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸைக் கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

துல்கர் சல்மான் தயாரித்த இந்தப் படத்தில் நஸ்லென் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story