“லோகா” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள லோகா’ திரைப்படம் உலகளவில் ரூ. 266 கோடி வசூல் செய்துள்ளது.
“லோகா” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
Published on

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

லோகா திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியிலும் வெளியிட்டுள்ளனர். வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது. லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாட்களில் தாண்டியது. வசூலில் முதல் இடத்தை பிடித்த மோகன்லால் நடித்த எம்புரான் படத்தை வெளியாகி 24 நாட்களில் லோகா திரைப்படம் தாண்டி மலையாள சினிமா துறையில் அதிகம் வசூலித்த திரைப்பட அந்தஸ்தை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள இப்படம் இதுவரை 24 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. லோகா திரைப்படம் உலகளவில் ரூ. 266 கோடி வசூல் செய்துள்ளது.இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், லோகா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் துல்கர் சல்மான்.போலிச் செய்திகளை புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com