மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி!

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் 'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவரது படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது ரஜினிகாந்த்தின் 171-வது படமான 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வருகிறார்.

அதாவது லோகேஷ் கனகராஜ் 'சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" போன்ற படங்கள் எல்சியு வின் கீழ் அடங்கும். அதனை தொடர்ந்து 'பென்ஸ்' படமும் எல்.சி.யு வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லேகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, "கமல் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். மீண்டும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. அது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்" என்று கூறியுள்ளார். கடந்த 2022-ம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com