“காட்டாளன்” படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்

பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள ‘காட்டாளன்’ படம் இன்று 1100 திரைகளில் வெளியானது.
“காட்டாளன்” படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்
Published on

‘மார்கோ’ படத்தை அடுத்து ‘காட்டாளன்’ என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரித்துள்ளார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

தாய்லாந்தில் இதன் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. புகழ் பெற்ற தாய்லாந்து படமான ‘ஓங்க்- பேக்’ படத்தின் ஆக்‌ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவருடைய குழுவினர் இந்தக் காட்சிகளை அமைத்தனர். இதில் ஓங்க்- பேக்’ படத்தில் நடித்த புகழ்பெற்ற யானையான பொங், இதிலும் நடித்துள்ளது.

பான்-இந்திய வெற்றிப் படமான 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முஹமது தயாரிக்கும் இரண்டாவது படமான ‘காட்டாளன்’ மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் முதல் பாடலின் புரோமோவை விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டார். தணிக்கை வாரியம் ஆண்டனி வர்கீஸின் ‘காட்டாளன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இன்று வெளியானது.

இந்நிலையில், ‘காட்டாளன்’ படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்த போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. இவர் லியோ காப்ரல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.இப்படம் இன்று 1100 திரைகளில் வெளியானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com