''நான் மேதை அல்ல...'' - சஞ்சய் தத்தின் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதில்

லியோ படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார்.
சென்னை,
''லியோ படத்தில் என்னை வீணடித்துவிட்டார்'' என்ற சஞ்சய் தத்தின் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கூறுகையில், "அந்த சம்பவத்திற்கு பிறகு சஞ்சய் சார் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம், ''நான் வேடிக்கையாகதான் அந்த கருத்தைச் சொன்னேன், ஆனால் அதை சமூக ஊடகங்களில் பெரிதாக்கிவிட்டார்கள். எனக்கு அது சங்கடமாக இருக்கிறது'' என்று கூறினார். நான், 'பிரச்சினை இல்லை சார்' என்று சொன்னேன். என்றார்.
லோகேஷ் மேலும் கூறுகையில், , "நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குனரோ அல்ல. நான் என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் செய்வேன்'' என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ''லியோ'' படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார்.






