இராவண கோட்டம் படத்தின் பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

இராவண கோட்டம் படத்தின் டைட்டில் பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இராவண கோட்டம் படத்தின் பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!
Published on

சென்னை,

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

'இராவண கோட்டம்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் டிராக் பாடலின் லிரிக்கல் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com