சுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்...? வெளியான போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட போஸ்டரில் சுருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
சுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்...? வெளியான போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்
Published on

சென்னை,

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர் 'பைட் கிளப்' என்ற படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று நிலையில் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட போஸ்டரில் சுருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்துகொண்டு நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், 'இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் சுருதி ஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com