ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.. யார் அந்த இயக்குனர்?


ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.. யார் அந்த இயக்குனர்?
x
தினத்தந்தி 7 May 2025 5:43 PM IST (Updated: 14 Jun 2025 3:03 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனரும், தயாரிப்பாளருமான லோகேஷ் கனகராஜ் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

தற்போது ரஜினியை வைத்து 'கூலி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் அருண் மாதேஸ்வரன் 'இளையராஜா பயோக்பிக்' படத்தை இயக்க இருந்தார். அந்த படத்தை இயக்க தாமதமாகும் என்பதால் லோகேஷ் கனகராஜை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story