'கூலி' படத்தின் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு சென்ற லோகேஷ், சாண்டி மாஸ்டர்

ரசிகர்கள் கூலி திரைப்படத்தை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
'கூலி' படத்தின் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு சென்ற லோகேஷ், சாண்டி மாஸ்டர்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் முதல்காட்சி 9 மணிக்கு தொடங்கியுள்ளது. கூலி படத்தை பார்க்க இயக்குனர் லோகேஷ், சாண்டி மாஸ்டர் மற்றும் நடிகர் சிவா ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்றனர். அவர்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com