பரபரப்பான கோர்ட்டு காட்சியில் நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனங்களை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்.
பரபரப்பான கோர்ட்டு காட்சியில் நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்
Published on

அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு, நேர்கொண்ட பார்வை என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. படத்தின் உச்சக்கட்ட காட்சி அங்கு படமாக்கப்பட்டது. இதற்காக பிரமாண்டமான கோர்ட்டு வளாக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.

அதில், அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சி படமானது. நீளமான வசனங்களை அஜித் ஒரே டேக்கில் பேசி நடித்தார். அதைப்பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் கைதட்டினார்கள். பின்னர் படக்குழுவை சேர்ந்த ஒவ்வொருவரும் அஜித்துடன் கைகுலுக்கி, அவருடைய நடிப்பை பாராட்டினார்கள். அந்த பாராட்டு மழையில் நனைந்து போன அஜித் நெகிழ்ந்து போய், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த பாராட்டெல்லாம் டைரக்டர் வினோத்துக்குத்தான் போய் சேர வேண்டும். அவர் டைரக்ஷனில் நடித்ததை சவுகரியமாக உணர் கிறேன் என்று அஜித் சொன்னார். கோர்ட்டில் நீளமான வசனம் பேசி அஜித் நடித்ததுடன், நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. கதாநாயகியாக வித்யாபாலன் நடித்து இருக்கிறார். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி, படம் திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com