நடிகைகளை கண்ணியமாக பாருங்கள்; மரியாதையாக நடத்துங்கள் - கீர்த்தி சனோன்

உங்களை மகிழ்விக்கும் எங்களை மரியாதையாக நடத்துங்கள் என்று நடிகை கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சனோன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன், சமீபத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்த 'காக்டெயில்-2' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சனோன், சமூக வலைதளங்களில் எதிர்மறை சுருத்துகள் பரவுவது குறித்த தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.

"நடிகைகள் குறித்து விமர்சிப்பது என்பது சிலருக்கு பொழுதுபோக்காகி விட்டது. லேசாக ஆடைகள் விலகினால் போதும், உடனே அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தங்கள் விஷ கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகைகளை கண்ணியமாக பாருங்கள். உங்களுக்கு திரையில் தோன்றி மகிழ்விக்கும் எங்களை மரியாதையாக நடத்துங்கள். போலி ஆபாச படங்களை வெளியிட்டு சந்தோஷம் காண வேண்டுமா? இது கேவலம் இல்லையா..." என்று கீர்த்தி சனோன் கொந்தளித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com