நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு..!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு..!
Published on

சென்னை,

பிரபல நடன இயக்குனர் பிருந்தா கோபால், துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக பிருந்தா இயக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்கு 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த் மற்றும் ஹிரிது ஹருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com