

மும்பை,
"தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆப் பவர்" தொடரின் மூன்றாவது சீசன் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர். டோல்கீன் எழுதிய"தி ஹாபிட்" மற்றும் "தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்" ஆகிய படைப்புகளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 'மிடில்-எர்த்' உலகின் இரண்டாம் யுக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் சீசன் 2022-ம் ஆண்டிலும், இரண்டாவது சீசன் 2024-ம் ஆண்டிலும் வெளியாகி உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.