"அந்த படத்துக்காக உடலை குறைத்தேன்... ஆனால் கடைசியில்.." - நடிகை தனிஷா உருக்கம்

திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் உடல் ரீதியான அழுத்தங்கள் குறித்து தனிஷாவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
"அந்த படத்துக்காக உடலை குறைத்தேன்... ஆனால் கடைசியில்.." - நடிகை தனிஷா உருக்கம்
Published on

மும்பை,

பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜி, தனது திரைப்பயணம் மற்றும் 2005-ல் வெளியான 'நீல் & நிக்கி' (Neil & Nikki) திரைப்படத்திற்காக தான் மேற்கொண்ட உடல் மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் தனிஷாவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்திற்காக ஆதித்யா சோப்ரா தன்னை உடல் எடையைக் குறைக்க வற்புறுத்தியதாக தனிஷா தெரிவித்துள்ளார்.

Also Read
விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு
"அந்த படத்துக்காக உடலை குறைத்தேன்... ஆனால் கடைசியில்.." - நடிகை தனிஷா உருக்கம்

இது குறித்து அவர் பேசுகையில், "முதல் போட்டோஷுட்டின் போது எனது இடுப்பைச் சுற்றி சதை அதிகமாக இருந்தது. அதைப் பார்த்த ஆதித்யா சோப்ரா, நீங்கள் இப்படி இருக்கக்கூடாது என்று கூறினார். பின்னர் அதை குறைத்து படத்திற்கான தோற்றத்தைப் பெற நான் மிகவும் தீவிரமாக உழைத்தேன். ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த டயட்டைப் பின்பற்றியதால் எனது உடலில் ஹார்மோன் சமநிலை (Hormonal Imbalance) பாதிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தோற்றத்தைத் தக்கவைக்கப் போராடும் போது இத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படுவது இயல்பு, அதுதான் எனக்கும் நடந்தது" என்று தனிஷா வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் உடல் ரீதியான அழுத்தங்கள் குறித்து தனிஷா முகர்ஜியின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது பாலிவுட்டில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com