ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை லூயிஸ் பிளெட்சர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகை லூயிஸ் பிளெட்சர், பிரான்சில் உள்ள இல்லத்தில் உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை லூயிஸ் பிளெட்சர் மரணம்
Published on: 

அவருக்கு வயது 88. லூயிஸ் பிளெட்சர் 1958-ல் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். 1976-ல் மிலோஸ் போர்மன் இயக்கத்தில் வெளியான 'ஒன் ப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது லூயிஸ் பிளெட்சருக்கு கிடைத்தது.

உயரிய பாப்தா, கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றார். இதன் மூலம் ஆட்ரி ஹெப்பர்ன், லிசா மின்னெல்லி ஆகியோருக்கு பிறகு ஒரே படத்துக்காக 3 உயரிய விருதுகளை பெற்ற பெருமை லூயிஸ் பிளெட்சருக்கு கிடைத்தது. எக்ஸார்சிஸ்ட்; தி ஹெரெடிக், பயர் ஸ்டார்ட்டர், டேஸ் இன் தி வேலி, பிளவர்ஸ் இன் தி அட்டிக், கிரூயல் இண்டென்ஷன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். லூயிஸ் பிளெட்சர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com