நடிகை மஞ்சிமா மோகனை காதலிக்கிறேன் - நடிகர் கவுதம் கார்த்திக் அறிவிப்பு

நடிகை மஞ்சிமா மோகனை காதலிக்கிறேன் என நடிகர் கவுதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகனை காதலிக்கிறேன் - நடிகர் கவுதம் கார்த்திக் அறிவிப்பு
Published on

தமிழில் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரும், நடிகை மஞ்சிமா மோகனும், 'தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வந்தன. அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களிலும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். காதல் குறித்து இருவரும் பதில் சொல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் மஞ்சிமா மோகனுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கவுதம் கார்த்திக் நேற்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மஞ்சிமா மோகனுடன் முதலில் நட்பாக பழகி இப்போது அது வலுவான உறவாக வளர்ந்துள்ளது. நான் மோசமான நிலையில் இருந்தபோதும் நீ (மஞ்சிமா மோகன்) பக்கத்தில் இருந்தாய். என்னை வாழ்க்கையில் முன்னோக்கி கொண்டு செல்கிறாய். என் வாழ்க்கையில் நீ இருப்பதால் நான் உணராத ஒரு அமைதி இதயத்தில் இருக்கிறது. இந்த இணைப்பை விளக்க காதல் என்ற வார்த்தை போதுமானதாய் இல்லை. நீ என் அருகில் இருந்தால் எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும். உன்னை முழுமனதோடு நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுபோல் மஞ்சிமா மோகனும், கவுதம் கார்த்திக்கை காதலிப்பதாக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com