இந்த கால காதல் நிலைப்பது இல்லை- நடிகை ரகுல் பிரீத் சிங்

நேர்காணல் ஒன்றில் ரகுல்பிரீத் சிங்கிடம் உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கால காதல் நிலைப்பது இல்லை- நடிகை ரகுல் பிரீத் சிங்
Published on

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ரகுல்பிரீத் சிங் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ரகுல்பிரீத் சிங்கிடம் உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, "காதலுக்கு எல்லை இல்லை. எந்தவித நிபந்தனைகளும் இருக்காது. நீங்கள் ஒருவரோடு உண்மையான காதலில் இருந்தால் அவருடன் மிகவும் சவுகரியமாக இருப்பீர்கள். ஒருவர் மீது மற்றொருவருக்கு கவுரவம் அதிகமாகும். அது இருவரின் முன்னேற்றத்திற்கு துணையாக இருக்கும்.

ஆனால் இந்த காலத்தில் சிலர் காதல் என்பதை தரம் தாழ்த்தி விட்டனர். காதலை தவறாக பயன்படுத்துகின்றனர். எதையோ காதல் என்று நினைத்துக்கொள்கின்றனர். காதல் செய்வோரை வளரவிடாமல் தனக்கு பிடித்ததை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.அதனால் தான் இந்த கால காதல் உறவுகள் நீண்ட காலம் நிலைக்காமல் முறிந்து விடுகின்றன.

காதலில் பொய்க்கு இடம் இல்லை. நல்ல நண்பர்களாக இருக்கும்போது எப்படி ஒளிவு மறைவில்லாமல் இருக்கிறோமோ அதே போல காதல் உறவிலும் இருக்க வேண்டும். பொய்யை சொல்வது, அதை மறைக்க முயற்சி செய்வது போன்றவை மோசம் செய்வதற்கு சமம்.'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com