நடிகை ஓவியாவுடன் காதலா? ஆரவ் விளக்கம்

‘களவாணி’ படத்தில் அறிமுகமாகி அதிக படங்களில் நடித்துள்ள ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டார்.
நடிகை ஓவியாவுடன் காதலா? ஆரவ் விளக்கம்
Published on

ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள். பின்னர் காதலை ஆரவ் முறித்ததாக மனம் உடைந்து அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டு போலீசார் நேரில் விசாரித்த சம்பவம் நடந்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் ஓவியாவும், ஆரவ்வும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். தாய்லாந்தில் இருவரும் ஜோடியாக சுற்றிய புகைப்படமும் வலைத்தளத்தில் வெளியானது. தற்போது இருவரும் படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆரவிடம் நீங்களும், ஓவியாவும் ஜோடியாக சுற்றுகிறீர்களே? இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து ஆரவ் கூறியதாவது:-

நானும், ஓவியாவும் நல்ல நண்பர்கள். நாங்கள் காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. இருவரும் ஜோடியாக சுற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? அது ஒன்றும் குற்றம் இல்லையே? எனது முழு கவனமும் இப்போது சினிமாவில் இருக்கிறது. நடிப்பில் பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் நடித்துள்ள மார்க்கெட் ராஜா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து ராஜா பீமா வெளியாகும். ஓவியாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு ஆரவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com