'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'லவ்வர்' படம் கடந்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

' குட் நைட் ' திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பலரையும் கவர்ந்தார்.இதன் பிறகு, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, லவ்வர் திரைப்படம் மார்ச் மாதம் வரும் 27ம் தேதி முதல் டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com