நடிகைகளுக்கு குறைந்த சம்பளம் - கியாரா அத்வானி வருத்தம்

ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
நடிகைகளுக்கு குறைந்த சம்பளம் - கியாரா அத்வானி வருத்தம்
Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர்-நடிகைகளின் சம்பள விஷயம் குறித்து கியாரா அத்வானி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

சம்பளம் விஷயத்தில் கதாநாயகர்களை விட கதாநாயகிகள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இது நீண்டகால பிரச்சினை என்றாலும், இதை பற்றி பேசி எந்தவித பிரயோஜனமும் இல்லை. நமது திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிப்பார்கள். ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதனால் இந்த விஷயத்தில் யோசிக்காமல் நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை மெருகேற்றிக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு கொடுக்கிறார்களோ, அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது சம்பள விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

இவ்வாறு கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com