சிறந்த நடிகை விருது பெற்ற காயத்ரி

ஜெய்ப்பூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படத்தில் நடித்துள்ள காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.
சிறந்த நடிகை விருது பெற்ற காயத்ரி
Published on

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்துள்ள 'மாமனிதன்' படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் ஜோக்கர் படம் மூலம் பிரபலமான குருசோமசுந்தரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மாமனிதன் படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. சமீபத்தில் ஈரான் நாட்டில் உள்ள அபதான் என்ற தீவில் உள்ள மூவிங் திரைப்பட கல்லூரி திரைப்பட விழாவில் மாமனிதன் திரையிடப்பட்டு விஜய்சேதுபதிக்கு 2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்ற விருதை வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன், கார்கி, இரவின் நிழல், விசித்திரன் உள்ளிட்ட பல தமிழ் படங்கள் திரையிடப்பட்டன. இதில் மாமனிதன் படத்தில் நடித்துள்ள காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் 2 குழந்தைகளின் தாயாக யதார்த்தமாக அவர் நடித்து இருந்தார். விருது பெற்ற காயத்ரிக்கு இயக்குனர் சீனுராமசாமி உள்ளிட்ட திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com