நார்வே படவிழாவில் 5 விருதுகளை வென்ற தமிழ் படம்

மாநாடு படம் நார்வேயில் நடந்த சர்வதேச படவிழாவில், போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.
நார்வே படவிழாவில் 5 விருதுகளை வென்ற தமிழ் படம்
Published on

கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து வெற்றி பெற்ற மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் நார்வேயில் நடந்த சர்வதேச படவிழாவில், போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.அதில் சிறந்த டைரக்டருக்கான விருதை வெங்கட் பிரபுவும், சிறந்த வில்லனுக்கான விருதை எஸ்.ஜே.சூர்யாவும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை யுவன்சங்கர் ராஜாவும், சிறந்த படதொகுப்பாளருக்கான விருதை பிரவீன் கே.எல்.லும் தட்டி சென்றார்கள்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நீண்டகால கலைச்சேவையை பாராட்டி, கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com