அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய "மாநகரம்" பட நடிகர்... ரசிகர்கள் அதிர்ச்சி

'மாநகரம்' படத்தில் நடித்த ஸ்ரீ-யின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய "மாநகரம்" பட நடிகர்... ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

சென்னை,

2012-ம் ஆண்டு வெளியான 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. தெருவில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் கேரக்டரில் அப்படியே பொருந்தி இருந்தார். படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்','வில் அம்பு', 'மாநகரம்' படங்கள் அவருக்கு கைகொடுத்தன. கடந்த 2023-ம் ஆண்டு 'இறுகப் பற்று' படம் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. ஆனால் அதன்பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், நல்ல படங்களை கொடுத்தும் முன்னணி இடத்திற்கு இவரால் செல்ல முடியவில்லை.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சில வருடங்களாக இவரை காணாமல் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு எதனால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர்

இந்த நிலையில், இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com