"மாரீசன்" படத்தின் முதல் நாள் வசூல் விவரம்

நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை,
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் நேற்று 'மாரீசன்' என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கதைப்படி வடிவேலு மறதி நோய் உள்ளவர். ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பின்-ஐ மறந்துவிடுகிறார். திருடனான பகத் பாசில் அப்போது அங்கு வந்து வடிவேலுவிடம் அதிக பணம் இருப்பதை அறிந்ததும், அதை எப்படியாவது அபேஸ் செய்ய முடிவெடுத்து அவரை பைக்கில் அழைத்து செல்கிறார். இந்த பயணத்தின் போது என்ன ஆனது? வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணத்தை திருடினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.
இந்த நிலையில், மாரீசன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மாரீசன் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.2.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.






