விஜய் ஆண்டனி நடிக்கும் "மார்கன்" படத்தின் தீம் பாடல் வெளியீடு

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Published on

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மார்கன் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 'மார்கன்' படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.'மார்கன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் 'மார்கன்' திரைப்படத்தின் 'உலகையே முழுவதும் வெறுக்கிறேன்' எனும் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் அருண் பாரதி வரிகளில் அக்ஷாரா பாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com