இரண்டே நாட்களில்...வசூலில் அரைசதம் அடித்த ''மதராஸி''

ஞாயிற்றுக்கிழமை( இன்று) வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவான ''மதராஸி'' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வித்யுத் ஜாம்வால் வில்லனாக நடித்திருக்கும் இந்த ஆக்சன் படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் என்.வி. பிரசாத், ஸ்ரீ லட்சுமி மூவீஸ் சார்பில் தயாரித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் இரண்டே நாட்களில் வசூலில் அரைசதம் அடித்திருக்கிறது. உலகளவில் ரூ. 50 கோடி வசூலை ''மதராஸி'' எட்டியுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை( இன்று) வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திங்கட்கிழமை வசூல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






