“மதராஸி”படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
“மதராஸி”படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மதராஸி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலானது. மதராஸி படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

மதராஸி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. மதராஸி படத்தின் முழு ஆல்பம் வெளியானது.

மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் புரோமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதராஸி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க இருக்கிறது. இத்திரைப்படம் பிரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிவிட்டது. இதுவரை நடைபெற்ற பிரீ புக்கிங்கில் ரூ. 8.9 லட்சம் வசூல் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com