ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன்!

மாதவன் நடிக்கும் ஜி.டி.நாயுடுவின் வரலாற்று பட டைட்டில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன்!
Published on

சென்னை,

நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு துறையில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகிறது. அந்த வகையில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' என்ற பெயரில் மாதவன் இயக்கி நடித்திருந்தார். இப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்த இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றிருந்தது. மேலும் இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டை பெற்றது.

'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' படத்திற்கு பிறகு மீண்டும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக போஸ்டருடன் கடந்த 2023ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. மறைந்த ஜி.டி.நாயுடு, எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

இந்த நிலையில் ஜி.டி.நாயுடு வாழ்கை வரலாற்று படம் குறித்த அப்பேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும் இப்படத்தை 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தை இணைந்து தயாரிக்கிறது.

ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. படத்தின் டைட்டில் பிப்ரவரி 18ம் தேதி வெளியிடப்படும் என்றும் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com