மாதவனின் “ரன்” திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படம் வரும் 24ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
மாதவனின் “ரன்” திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். காதல் - ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இதனை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படம் வரும் 24ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளாவிலும் இப்படம் வெளியாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com