மீண்டும் 'எல்.சி.யூ'வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் 'எல்.சி.யூ'வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில் மலையாள நடிகர் நிவின் பாலி 'பென்ஸ்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை மடோனா செபாஸ்டியன் 'பென்ஸ்' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் எல்.சி.யூ கதையில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'லியோ' படத்தில் படத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீண்டும் லோகேஷ் கனகராஜின் 'எல்சியூ'வில் இணைந்தது பென்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com