சர்ச்சை பதிவு - கனல் கண்ணனுக்கு கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை,
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கனல் கண்ணன்.
சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை குறித்து இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. இதுதொடர்பாக, சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, கனல் கண்ணன் சர்ச்சைப் பதிவை நீக்கியதாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி மெட்ராஸ் ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story






