அனுமான் பட இயக்குநரின் ‘மகா காளி’ - வைரலாகும் பிரீ லுக் போஸ்டர்


MAHAKALI TEAM TO UNVEIL LEAD CHARACTERS FIRST LOOK TOMORROW
x

இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார்.

சென்னை,

பான் இந்திய படமாக வெளியான அனுமான் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா. இந்தப் படத்தில் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை உருவாக்கினார். இந்த யுனிவர்ஸில் 3ஆவது படமாக ’மகா காளி’ தயாராகி வருகிறது.

இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பாக ரிவாஸ் ரமேஷ் டுக்கல் தயாரிக்க பூஜா அபர்ணா கொலுரு இயக்குகிறார்.

முன்னதாக இப்படத்தல் 'அசுரகுரு சுக்ராச்சார்யா' ஆக அக்சய் கண்ணா நடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தநிலையில், தற்போது மகா காளியின் பிரீ லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும், நாளை காலை 10.08 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story