மீண்டும் இணையும் "மகாராஜா" பட கூட்டணி

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இணையும் "மகாராஜா" பட கூட்டணி
Published on

சென்னை,

'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'.இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் ரூ201 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 'மகாராஜா' 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியிட்டனர். இப்படம் சுமார் 40,000 திரைகளில் வெளியிட பட்டது. இப்படம் சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.

'மகாராஜா' படத்தைப் பார்த்த ஆஸ்கர் விருது வென்ற 'பேர்ட்மேன்' படத்தின் இயக்குநர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியதாகவும், அவரது அடுத்த படத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நிதிலன் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ், நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டினார். அடுத்தாக, நித்திலன் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், மகாராஜா பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய்சேதுபதி- இயக்குனர் நிதிலன் மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com