''ஹிருத்திக் ரோஷனை அந்த வேடத்தில் பார்க்க விரும்புகிறேன்'' - ''மகாவதார் நரசிம்மா'' இயக்குனர்


Mahavatar Narsimha director Ashwin Kumar: Want to see Hrithik Roshan ias Nataraja
x
தினத்தந்தி 22 July 2025 4:42 PM IST (Updated: 22 July 2025 5:20 PM IST)
t-max-icont-min-icon

அஸ்வின் குமார் இயக்கி உள்ள "மகாவதார் நரசிம்மா" படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை ஒரு புராண படத்தில் ''நடராஜர்'' வேடத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக ''மகாவதார் நரசிம்மா'' இயக்குனர் அஸ்வின் குமார் கூறி இருக்கிறார்.

ஹிருத்திக்கின் உடல் அமைப்பையும், நடன அசைவுகளையும் பார்க்கும்போது, நடராஜர் கதாபாத்திரத்தை சித்தரிக்க ஏற்றவராக இருப்பார் என்று அஸ்வின் குமார் கூறுகிறார்.

அஸ்வின் குமார் தற்போது "மகாவதார் நரசிம்மா" என்ற புராண படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து இரண்டு புராண படங்களை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். "அஜாமிலா" மற்றும் "அர்த்தநாரீஸ்வரர்" ஆகும்.

1 More update

Next Story