படப்பிடிப்பின்போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுக்கோட்டையில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். #tamilnews
படப்பிடிப்பின்போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புகழேந்தி என்னும் நான் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருள்நிதி கதாநாயகனாகவும், அவருக்கு தந்தையாக இயக்குனர் மகேந்திரனும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது திடீரென இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இயக்குனர் மகேந்திரன் மூச்சுத்திணறல் மற்றும் அதிகமான ரத்த அழுத்த சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சைக்கு வரும்போது இதயத்திலும் பிரச்சினை இருந்தது என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com