ராமர் கெட்டப்பில் மகேஷ் பாபு..வைரலாகும் புகைப்படம்

ராமர் உடையில், கையில் வில்லுடன் மகேஷ் பாபு நிற்கிறார்.
ராமர் கெட்டப்பில் மகேஷ் பாபு..வைரலாகும் புகைப்படம்
Published on

சென்னை,

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமான வாரணாசி தயாரிப்பில் ராஜமவுலி பிசியாக உள்ளார். இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

திரேதா யுகத்தில் படத்தின் ஒரு பகுதி நடப்பதாகவும், அதில் மகேஷ் பாபு ராமர் வேடத்தில் நடிப்பதாகவும் ராஜமவுலி உறுதிப்படுத்தியுள்ளார்.

வாரணாசி படத்திலிருந்து மகேஷ் பாபுவின் ராமர் தோற்றம் கசிந்ததா? குண்டூரில் உள்ள டிஜிட்டல் தியேட்டர் விளம்பர பலகையில் இந்த லுக் காணப்பட்டதாக போஸ்டர் பகிரப்பட்டுள்ளது.

வைரலாகும் போஸ்டர், மகேஷ் பாபுவின் தீவிர தயாரிப்பையும், ராஜமவுலியின் இயக்கத்தில் படத்தின் பிரம்மாண்டத்தையும் காட்டுகிறது. ராமர் உடையில், கையில் வில்லுடன் மகேஷ் பாபு நிற்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com