‘சீன்’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு.. நன்றி தெரிவித்த சூர்யா

மிகவும் கூலாகவும், ஸ்டைலாகவும், புத்திசாலித்தனமாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் 'சீன்' திரைப்படம் அமைந்துள்ளது என நடிகர் மகேஷ் பாபு பதிவிட்டிருந்தார்.

‘சீன்’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு.. நன்றி தெரிவித்த சூர்யா
Published on: 

சென்னை,

"எங்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி, உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எங்கள் ஒட்டுமொத்த குழுவின் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த அழகான செயலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்". என நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'சீன்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

வசூல் சாதனை

'சீன்' திரைப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் 'சீன்' படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சீன்” படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

இதற்கிடையில், சீன் படத்தைப் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட பதிவில் "சீன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் கூலாகவும், ஸ்டைலாகவும், புத்திசாலித்தனமாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் 'சீன்' திரைப்படம் அமைந்துள்ளது. இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா அசத்தியுள்ளார். நஸ்ரியா மற்றும் நஸ்லென் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் ஜித்து மாதவனின் எழுத்தும், திரைக்கதை அமைப்பும் மிகச் சிறப்பாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நன்றி தெரிவித்த சூர்யா!

இந்த நிலையில், நடிகர் சூர்யா மகேஷ் பாபுவின் பதிவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள மகேஷ் பாபு அவர்களே, உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. எங்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி, உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எங்கள் ஒட்டுமொத்த குழுவின் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த அழகான செயலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்". என்று தெரிவித்துள்ளார்.

X