புஷ்பா இயக்குனரின் மகள் நடிக்கும் 'காந்தி தாத்தா செட்டு' - டிரெய்லரை வெளியிட்ட மகேஷ் பாபு


Mahesh Babu Unveils The Trailer Of Sukumar Daughter Starrer Gandhi Tatha Chettu
x

காந்தி தாத்தா செட்டு வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ரூ. 1,799 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப்படைத்துள்ளது. இவரது மகள் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி.

இவர் காந்திய கொள்கையான அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'காந்தி தாத்தா செட்டு' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தாதாசாஹேப் பால்கே விருதை வென்றார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் கோபி டாக்கீஸ் தயாரிப்பில் பத்மாவதி மல்லாடி இயக்கிய காந்தி தாத்தா செட்டு வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ரீ இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.


Next Story